தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞர் கைது - Chennai Pallavaram

சென்னை: 14 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

14 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய இளைஞன் கைது
14 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய இளைஞன் கைது

By

Published : Jun 10, 2021, 6:20 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ரகிம் (24). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார்.

14 வயது சிறுமி 2 மாதம் கர்ப்பம் ஆனதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கலைப்பதற்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு திருமணமாகாமல் 14 வயது சிறுமிக்கு கரு கலைப்பதற்காக அழைத்து வந்ததால், இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களிடம் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

தகவலின் அடிப்படையில் நேரில் சென்ற அலுவலர்கள் 14 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பம்மல் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த ரகிம் என்பவரை காதலித்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தாம்பரம் மகளிர் காவல் துறையினர் ரகிம்மை கைதுசெய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details