தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு - விசாரணைக்கு உத்தரவு!

சென்னை: மின்சாரத் துறையில் கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

case
case

By

Published : Feb 3, 2020, 1:03 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால், 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்குக் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது. இதில், மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருள்களை எடுத்துச் செல்வது போன்ற உடல்தகுதித் தேர்வில் தோல்வியடைந்த பலரை, சில தொழிற்சங்கங்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மின்துறை அலுவலர்கள், தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரரின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: சபரிமலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ABOUT THE AUTHOR

...view details