டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 43 நாட்களாக ஊரடங்கால் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் மதுபானக் கடைகள் உள்பட பிற கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய அரசு வழங்கியது. அதன்படி, சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனைக் கண்டிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்டக் கட்சிகளும் அரசின் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? - கமல்ஹாசன் - டாஸ்மாக்
சென்னை: டாஸ்மாக்கை திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமா தமிழகம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், மதுபான கடைகள் திறப்பைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமா தமிழகம் ” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’இரண்டு நாட்கள் காத்திருந்து பெறுவதற்குப் பெயர் எமர்ஜென்சி பாஸா?’- உயர் நீதிமன்றம் கேள்வி!