சென்னை:ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் குடியரசு தினக்கொண்டாட்டத்தின் போது அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
அதில் வேலுநாச்சியார், வ.உ.சி, மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன் உள்ளிட்ட சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட முன்னணி தலைவர்களின் சிலைகளும், விடுதலைக்குப் பிறகும் நாட்டிற்கு அரும்பணி ஆற்றிய தலைவர்களின் பெருமையையும் பறைசாற்றும் வகையில் பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜ், ராஜாஜி உள்ளிட்டோரின் உருவச் சிலைகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.