தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை பராமரிப்பு பணிகள் தொய்வு - வேளச்சேரி ரயில் நிலையத்தில்

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தில் கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற இடங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தொய்வடைந்துள்ளதாக ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.

வேளச்சேரி

By

Published : May 1, 2019, 9:23 PM IST

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற இடங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்கள் எடுத்து செய்கின்றன. ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இப்பணிகளை எந்த தனியார் நிறுவனமும் எடுத்து செய்ய முன்வரவில்லை. இதனால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

விரைவில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் - ரயில்வேதுறை

இதுகுறித்து ரயில்வேதுறை வெளியிட்ட அறிக்கையில், "விரைவில் பராமரிப்பு பணிகள் சீர் செய்யப்படும் அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இருக்கும் ரயில்வே பாதை அகலப்படுத்தப்பட்டு ரயில் சேவை தொடங்க உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ABOUT THE AUTHOR

...view details