தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வு அறிவிப்பு! - tnpsc

சென்னை: தமிழ்நாடு மாநில நீதித் துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

tnpsc
tnpsc

By

Published : Sep 15, 2020, 6:20 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித் துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 2019 நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு 2020 மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தப் பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இதற்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details