தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் தோனி? - தமிழ் படம் தயாரிக்கிறார்

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, தமிழ்ப் படம் தயாரிப்பதாகவும், அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni
Dhoni

By

Published : May 10, 2022, 10:49 PM IST

Updated : May 11, 2022, 9:47 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான மகேந்திரசிங் தோனி, கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்கிறார். விளையாட்டில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தோனி தமிழ்த்திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா

தோனி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் முதல்கட்டமாக நடிகை நயன்தாராவின் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: AK62: சரவணபவன் அண்ணாச்சியாக நடிக்கும் அஜித்..?

Last Updated : May 11, 2022, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details