மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 58,993 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 301 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு வார இறுதி நாள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நேற்று (ஏப்ரல் 9) இரவு 8 மணிக்கு லாக்டவுன் தொடங்கி, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நிறைவடைகிறது.
ஒரே நாளில் 58,993 பேருக்கு கரோனா - மகாராஷ்டிராவில் வெள்ளி இரவு முதல், திங்கள் காலை வரை பொதுமுடக்கம்
மகாராஷ்டிராவில், கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து, அங்கு நேற்று (ஏப்ரல் 9) முதல், திங்கள்கிழமை காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பால், மருந்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுப்பாடுகளுடன் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 50 % ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.