தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதற்கு நாங்கள் பொறுப்பல்ல: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைவார் என மதுரை ஆதீனம் கூறியதற்கு நாங்கள் பொறுப்பல்ல என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

aadhi

By

Published : Mar 22, 2019, 10:57 AM IST

மதுரை ஆதீனம் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவும் அமமுகவும் விரைவில் இணைவது உறுதி. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தினகரன் பண்பாளர், மிகவும் பொறுமைசாலி என்றும் கூறினார். மேலும் அதிமுக அழைத்தால் தேர்தல் பரப்புரை செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மதுரை ஆதீனத்தின் கருத்து அமமுக மற்றும் அதிமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிடிவி தினகரன், ”அதிமுகவில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப்பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல... அதற்கு அவசியமும் இல்லை” என மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்ற மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details