சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள களப் பணியாளர்கள், மருத்துவக்குழு, தன்னார்வலர்கள் ஆகியோரை நேரில் சந்தித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இத்திட்டம் தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, "18 ஆவது நாளாக சென்னையில் தொற்று குறைந்து கொண்டு வருகிறது. தொற்று பாதித்தவர்கள் 70 விழுக்காடு இருந்து தற்போது 29 விழுக்காடாக குறைந்துள்ளது.
தற்போது 'கரோனா இல்லா தண்டையார்பேட்டை' எனும் புதிய திட்டத்தை, 38 வது வார்டில் தொடங்கியுள்ளோம். தொண்டு நிறுவனங்களின் உதவிகளோடு www.ajmf.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
'கரோனா இல்லாத தண்டையார்பேட்டை' : புதிய திட்டம் தொடங்கிவைப்பு
சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 'கரோனா இல்லாத தண்டையார்பேட்டை' எனும் புதிய திட்டத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
ஜூலை 31-க்குள் கரோனா இல்லா பகுதியாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். தன்னார்வலர்களுக்கு ஊதிய பிரச்சினை விரைவில் களையப்படும். சமூகப் பரவல் விகிதத்தில், ஒவ்வொரு மாநிலமும் தனி யுக்தியை உபயோகிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை சமூக பரவல் இல்லை.
இறப்பு விகிதத்தை பொறுத்தவரை, ஆரம்பக் கால கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள் தான் இறப்பதாகத் தகவல்கள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் பிளாஸ்மா தானத்தைத் தானாகவே வந்து அளிக்கின்றனர். அவர்களுக்குத் தேவை எனில் அசாம் மாநிலம் அமல்படுத்தியுள்ள திட்டத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தமிழ்நாட்டில் எந்தத் தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.