சென்னை மதுரவாயல், கிருஷ்ணா நகர்ப் பகுதியில் குறை தீர்க்கும் விநாயகர் கோயில் உள்ளது. நேற்றிரவு(ஜூன்.30) பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு கோயில் நடைசாத்தப்பட்டது.
இன்று(ஜூலை.01) காலை வழக்கம்போல் கோயிலைத் திறக்க வந்தபோது கோயிலில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மதுரவாயல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் கொள்ளைச்சம்பவம் குறித்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்புக்கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோயிலுக்கு வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
மதுரவாயலில் விநாயகர் கோவில் உண்டியலை திருடிய நபர்களால் பரபரப்பு மேலும் இதே பகுதியில் அடிக்கடி சிறு சிறு திருட்டுச்சம்பவம் நடைபெற்று வந்ததாகவும், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூவர் கைது