தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமஸ்கிருதத்தில் உறுதி மாெழி ஏற்ற விவகாரம்: காத்திருப்பு பட்டியலில் டீன்!

மதுரை மருத்துவக்கல்லூரியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு இப்போகிரேடிக் உறுதி மாெழிக்கு பதிலாக மகரிஷி சரத் சப்த் என்னும் உறுதி மொழியை எடுக்க வைத்த மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமஸ்கிருதத்தில் உறுதி மாெழி விவகாரம்
சமஸ்கிருதத்தில் உறுதி மாெழி விவகாரம்

By

Published : May 1, 2022, 2:07 PM IST

Updated : May 1, 2022, 9:36 PM IST

சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த 250 மாணவர்கள் கல்லூரியில் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஏப். 30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது மாணவர்கள் உறுதிமொழி ஏற்றபோது இப்போகிரெடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழியை வாசித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, துறை ரீதியான விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘விசாரணைக்கு பின் டீன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கல்லூரி டீன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவக்கல்வி முடித்து மருத்துவப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கும் இப்போகிரேடிக் உறுதிமொழி காலம் காலமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவக்கல்லூரியில் மகரிஷி சரக் சப்த் உறுதிமாெழி மேற்கொள்ளப்பட்டது கண்டிக்கத்தக்கது. மேலும், அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் இனிவரும் காலங்களில் அனைத்து துறைத் தலைவர்களும் எப்போதும் பின்பற்றப்படும் இப்போகிரேடிக் உறுதிமாெழியை தவறாது கடைபிடிக்கவும் மருத்துவக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடவும்' அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’கல்லூரி விழாவில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதியேற்ற விவகாரத்தில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததால் சர்ச்சை

Last Updated : May 1, 2022, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details