தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம்’ - மாணவர்கள் வலியுறுத்தல்! - ஆர்எஸ்எஸ்

சென்னை: பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

protest
protest

By

Published : Jan 7, 2020, 12:31 PM IST

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான முகமூடி அணிந்த மர்ம நபர்களின் தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்புகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி இளவரசி கூறியபோது, ”குடியுரைமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. பிற மாநிலங்கள் எதிர்ப்பது போல் தமிழக அரசும் அதனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். விடுமுறைக்காகத்தான் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாகக் கூறிய ஒய்.ஜி மகேந்திரன், மாணவர்கள் மீது குண்டு வீச வேண்டும் எனக் கூறிய எச். ராஜா ஆகியோரைக் கைது செய்ய வேண்டும்“ என்றார்.

’மாணவர்களைக் கொச்சைப்படுத்திய ஒய்.ஜி மகேந்திரன், எச். ராஜாவை கைது செய்ய வேண்டும்’

மாணவர்களின் தொடர் போராட்டத்தையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details