தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியுரிமை மசோதா நகலை தீயிட்டுக் கொளுத்திய மாணவர்கள் - மாணவர்கள் போராட்டம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை திருத்த மசோதா நகலை இந்திய மாணவர் சங்கத்தினர் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

students
students

By

Published : Dec 11, 2019, 4:43 PM IST

மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் குடியுரிமை சட்டமசோதா நகலை தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர், காவல் துறையினர் தண்ணீர் ஊற்றி அதனை அணைத்தனர்.

இது குறித்து, இந்திய மாணவர் சங்கப் பொதுச்செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசான நம் நாட்டில், மதத்தின் பெயரால் குடியுரிமை கொடுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்குவங்கம் ஆகிய நாடுகளிலிருந்து வரக்கூடிய இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரு லட்சம் தமிழர்கள் வந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு மறுக்கிறது. மாநில அரசிற்கு தமிழர்களின் நலன்களின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் உடனடியாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும்.

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

இந்தக் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அஸ்ஸாமில் மாணவர்கள் மிகப்பெரிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் போராட்டம் பரவிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு இதில் பின்வாங்காவிட்டால் நாடு முழுவதும் இப்போரட்டம் விரிவடையும்“ எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை' - அரசியல் விமர்சகர் மார்க்ஸ் சாடல்!

ABOUT THE AUTHOR

...view details