தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - தேர்வு முடிவுகள்

சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்

By

Published : Aug 12, 2021, 6:00 PM IST

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 13ஆம் தேதி (நாளை) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் மற்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள egovernance.unom.ac.in/result20, result.unom.ac.in ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்திக் கொள்ள கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details