தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவு: நிர்வாகக் குழு அமைப்பு - Vice chancellore

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

madras university committe appointed for new vice chancellor
madras university committe appointed for new vice chancellor

By

Published : May 22, 2020, 10:36 PM IST

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள துரைசாமியின் பதவிக்காலம் வரும் 25ஆம் தேதி முடிவடைகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய, சென்னைப் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் உறுப்பினர்களாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் சுந்தரம், சென்னை வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய துணைவேந்தரை நியமனம் செய்யும்வரை, இந்தக் குழு பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தெரிவித்தார்.

இதையும் படிங்க...டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details