madras institute of technology:குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 1,659 விடுதி மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில், 81 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனால் எம்.ஐ.டி. கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கல்லூரியில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோருக்குக் குறிப்பாக 90 விழுக்காடு நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி காணப்படுவதாகத் தகவல் வந்தது.