சென்னை:கரோனா தொற்று பரவல் காரணமாகசென்னை உயர் நீதிமன்றம் காணொலி காட்சி மூலமாகவும், நேரடி விசாரணை மூலமாகவும் வழக்குகளை விசாரித்துவருகிறது. அந்த வகையில் நேற்று(மார்ச். 2), தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் காணொலி காட்சி மூலம் வந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்க முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டதாக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம் - காணொலி காட்சி விசாரணை நிறுத்தம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணை மார்ச் 7ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்ட நீதிபதி, காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனை சக நீதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர். எனவே காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணைகள் மார்ச் 7ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. முக்கிய வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதி வழங்கப்படும். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் - வழக்கை முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு