ஐடிபிஐ வங்கி எனும் இந்திய தொழில் மேம்பாடு வங்கியில், பின்லாந்தை சேர்ந்த வின்வின்ட் ஓய் மற்றும் ஆக்சஸ் சன்சைன் நிறுவனங்கள் முறையே ரூ.393 கோடி மற்றும் ரூ.530 கோடி கடன் பெற்றுள்ளன. இதில் ரூ.600 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக பிரவீன் சின்கா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சிபிஐ, தொழிலதிபர் சிவசங்கரன், வங்கி மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.
ரூ.600 கோடி வங்கி மோசடி வழக்கு; சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு! - உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து தொழிலதிபர் சிவசங்கரன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தவிர சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக தனக்கு எதிராக சிபிஐயும், அமலாக்க துறையும் பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சிவசங்கரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவு அலுவலர்கள் அனுப்பிய சம்மன் நாட்களில், நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் அந்த நிறுவனத்தின் இயக்குநராகவோ, தலைவராகவோ பதவி வகிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இரண்டு வாரங்களில் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.