சென்னை பள்ளிக்கரணையில் விளம்பரப் பலகை கவிழ்ந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையை சேதப்படுத்தி ஆளும் கட்சியின் கொடிவைக்க யார் அனுமதி கொடுத்தது? அரசியல் கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்தால் மட்டும்தான் விருந்தினர்கள் வருவார்களா?
இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி காவல் துறை, போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.