தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்க வழக்கு: மருத்துவக் கல்லூரி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு! - மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் வழக்கு

அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில், மருத்துவக் கல்லூரி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Mar 4, 2022, 3:30 PM IST

சென்னை: தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏவிபிவி((ABVP - Akhil Bharatiya Vidyarthi Parishad)யைச் சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்த்துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்குச்சென்று சந்தித்தார். மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டி சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் பிப்ரவரி 17ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுவில், எந்த அரசியல் கட்சியுடனும் தனக்குத் தொடர்பில்லாத நிலையிலும், எவ்வித குறிப்பாணையும் கொடுக்காமலும் பிறப்பிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எதிர் மனுதாரர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கு குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் ஒன்பதாம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:போக்குவரத்து அலுவலக கணினி ஆப்ரேட்டர்களின் பணியை முறைபடுத்த வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details