தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூடுதல் இயக்குனரை, இயக்குனராக நியமித்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை

தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குனரை, இயக்குனராக நியமித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

high-court
high-court

By

Published : Oct 15, 2020, 7:50 PM IST

சென்னை :தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குனராக இருந்த மனோகரன் என்பவர், கடந்த ஜனவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து கூடுதல் இயக்குனராக இருந்த செந்தில்குமார் என்பவரை, புதிய இயக்குனராக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி, தற்போது கூடுதல் இயக்குனராக உள்ள ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இயக்குனர் பதவிக்கான பணி மூப்புப் பட்டியலில், 23ஆவது இடத்தில் தனது பெயர் இடம்பெற்றிருந்ததாகவும், 29ஆவது இடத்தில் இருந்த தன்னை விட இளையவரான செந்தில்குமாரை இயக்குனராக நியமித்தது சட்டவிரோதமானது என்றும் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், கூடுதல் இயக்குனர் செந்தில்குமாரை இயக்குனராக நியமித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த மனுவிற்கு நான்கு வார காலத்திற்குள் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார் ஆகியோர் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க :'குஷ்புவின் மன்னிப்பு அபத்தமானது' - மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சங்கம்

ABOUT THE AUTHOR

...view details