தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு மட்டும் அல்ல, அவரின் வழக்குகளுக்கும் வாரிசு தீபா, தீபக் - madras High Court has ordered Income Tax Department

ஜெயலலிதா காலமாகிவிட்டதால், அவருக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கில் தீபக், தீபாவை சேர்க்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு
ஜெயலலிதா செல்வ வரி வழக்கு

By

Published : Dec 6, 2021, 8:50 PM IST

சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008, 2009ஆம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி, வருமான வரித்துறையினர் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஜெயலலிதா மீது செல்வ வரிச்சட்டம் 35ஆவது பிரிவின்கீழ், இந்த வழக்குப் பதிவானது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கு

இதனையடுத்து, இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த நிலையில் இன்று (டிச.6) மீண்டும் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா வாரிசு

ஜெயலலிதா வாரிசு

அப்போது ஜெயலலிதா காலமாகி விட்டதால், அவரது வாரிசுகளான தீபக், தீபாவை வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரம் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:அதிமுக தலைமைப் பதவி: ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details