தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான ஏ.பி. சாஹி யார்?

சென்னை உயர் நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட அமரேஸ்வர் பிரதாப் சாஹியின் பின்னணி குறித்த சிறு தொகுப்பு.

ap sahi

By

Published : Nov 11, 2019, 11:29 AM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு இசையாத தஹில் ரமாணி, தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அக்கடித்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டலை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி என்று அறியப்படும் அமரேஷ்வர் பிரதாப் சாஹி பதவியேற்றுள்ளார்.

யார் இந்த அமரேஸ்வர் பிரதாப் சாஹி?

1959 ஜனவரி 1ஆம் தேதி பிறந்த சாஹி, 1985ஆம் ஆண்டு வழக்கறிஞர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் செப்டம்பர் 6ஆம் தேதி வழக்கறிஞராக அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். அங்கு பணியாற்றிக்கொண்டே சிவில், அரசியலைமைப்பு ஆகிய பிரிவுகளில் பயிற்சிபெற்றார். இப்பயிற்சியே 2004ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றிய அதே நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகும் வாய்ப்பை சாஹிக்கு பெற்றுத்தந்தது. பின்னர் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாகவும் அவரை உயர்த்தியது.

இது தவிர, பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆலோசகராகவும் இருந்தார். பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஆர். ஷா உச்ச நீதிமன்ற நீதிபதியானபின், 2018ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாஹி பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்பு!

2020 டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வுபெறப்போகும் சாஹி, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details