தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம் செய்திகள்

சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் தாக்கல்செய்த வழக்கில் மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தமத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!ரவு!
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

By

Published : Jan 30, 2021, 5:26 PM IST

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட எட்டு பேர் வழக்குத் தாக்கல்செய்துள்ளனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வுசெய்யும் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354-ஐ அமல்படுத்தாதது, அரசு மருத்துவர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது, அரசாணையை வெளியிட்ட அரசே அதை அமல்படுத்தாததால், கடந்த 11 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கௌதமன் முன்னிலையாகி வாதிட்டார். அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பாப்பையா வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.

இதையடுத்து 2009ஆம் ஆண்டு அரசாணை அமுல்படுத்தப்படுமா, அமல்படுத்தப்படாதா என பிப்ரவரி 3ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க...எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா

ABOUT THE AUTHOR

...view details