கரோனா தாக்கத்தின் காரணமாக விநாயகர்சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கடலில் கரைக்கவும் தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சார்பிலும், சிவசேனா கட்சி சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
விநாயகர் சிலைகளை அறநிலையத்துறை சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க உத்தரவு! - Madras HC on Vinayagar Chathurthi celebrations
12:33 August 22
சென்னை: கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை, தனிநபர்களே நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, தனிநபர்கள் வீடுகளில் வைத்து வழிபடவும், அந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டனர். அதேபோல், வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர்சிலைகளை கோயில் வாயில்களில் வைத்துவிட்டு செல்லவும் அனுமதி வழங்கினர்.
மேலும், பொது இடத்தில் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் செல்லவும் தமிழ்நாடு அரசின் அரசாணை தடை செய்வதால், அமைப்புகள் சார்பில் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தக்கூடாது எனவும், இதை மீறுவோருக்கு எதிராக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டனர். தனிநபர்கள் சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் நீதிபதிகள் அனுமதித்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில், கோயில்களில் தனிநபர்களால் வைக்கப்படும் சிலைகளை இந்து அறநிலையத்துறையே சேகரித்து நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வீடுகளில் வைத்து வழிபட்ட பின், கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறையினர் சேகரித்து அதனை நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.