நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயில் அமைந்துள்ள மலை அடிவாரத்தை சுற்றி அமைந்துள்ள கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில், கோயிலைச் சுற்றியுள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள நீர்நிலைகளில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து, பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
மலையடி வாரத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.