தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதிய சாலை அமைப்பு குறித்தான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம் செய்திகள்

சென்னை: பழைய சாலையைத் தோண்டி எடுத்த பிறகே, புதிய சாலையை அமைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras HC
Madras HC

By

Published : Jan 30, 2021, 5:56 PM IST

சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஆர்.எஸ். சரவணன் தாக்கல்செய்த மனுவில், தமிழ்நாடு முழுவதும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நிலையில், பழைய சாலைகளைத் தோண்டி எடுக்காமல் புதிய சாலைகள் அமைக்கப்படுவதால், பழைய சாலையின் உயரம் உயர்ந்து, நினைவுச் சின்னங்கள், புராதன சின்னங்கள், புராதன கோயில்கள் ஆகியவை சாலையைவிட தாழ்வான பகுதிக்குச் சென்றுவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகம் அருகே போர் நினைவுச் சின்னம், சென்ட்ரல் அருகே விக்டோரியா ஹால், எழும்பூர் அருங்காட்சியகம் ஆகியவை ஆதாரமாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், பழைய சாலையைத் தோண்டி எடுத்த பிறகே புதிய சாலையை அமைக்க தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கைவைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிங்க...எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா

ABOUT THE AUTHOR

...view details