நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் ஜூன் 22ஆம் தேதி மாலை அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, மைலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் காவல் துணை ஆணையர் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த அனுமதி வழங்கினார்.
ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு - Madras high court
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையில் தலையிட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
isari ganesh
முன்னதாக வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ், அனந்தராமன் என்பவர் மூலம் தன்னை அனுகியதாக கூறிய நீதிபதி, நீதி பரிபாலன நடைமுறையில் தலையிட்ட இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று கூறி இருவருக்கும் எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், நான்கு வாரத்தில் ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.