சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் நாயுடு (என்ற) வெங்கடேஷ்(28). இவரது நண்பர் பாலச்சுந்தர்(27). இருவரும் ஆலப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகே நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் வெங்கடேசை சரமாரியாக வெட்டியது.
இதைத் தடுக்க முயன்ற பாலச்சுந்தருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர், சிறு காயங்களுடன் பாலசுந்தர் தப்பிச் சென்று விட்டார். வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கொலையாளிகள் திண்டிவனத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை காவலர்கள் அங்கு விரைந்து, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன்(25), மணிகண்டன்(26), சங்கர்(26), பணப் பாண்டி(26), திவாகர்(21), தினேஷ்(22), முரளி கிருஷ்ணன்(27), சரன்ராஜ்(27) ஆகிய எட்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொலை செய்யப்பட்ட வெங்கடேஷுக்கும், அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும் சிறு மோதல் இருந்து வந்துள்ளது, இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு வெங்கடேசை வெட்டியுள்ளனர். அதில், அவர் பிழைத்து கொண்டார். அதன்பின், வெங்கடேஷ் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார்.
முன் விரோதக் காரணமாக இளைஞர் வெட்டி கொலை; 8பேர் கைது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை வந்தவர். அந்த இளைஞர்களை கொலை செய்வதாக வெங்கசேஷ் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த எட்டு பேரும், வெங்கடேசை கொலை செய்ததாக, வாக்கு மூலத்தில் தெரிவித்தனர்.