சென்னை சின்னப் போரூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் வானகரம் சர்வீஸ் சாலைப் பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். இவரது கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை, போதைப்பொருள்கள் விற்பனைசெய்யப்படுவதாக மதுரவாயல் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் செல்லத்துரை தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நேற்றிரவு (பிப். 24) இந்தக் கடையில் சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலைப் பொருள்களை மறைத்துவைத்து விற்பனைசெய்தது தெரியவந்தது.