தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அப்பா திட்டுவார் என்ற பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

மதுரவாயல் அருகே தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தந்தை திட்டுவார் என்ற அச்சத்தில் 12ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை வேண்டாம், say no to suicide
தற்கொலை வேண்டாம்

By

Published : Dec 3, 2021, 1:25 PM IST

சென்னை: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர், தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகன் ராஜா (18) காரம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில், பள்ளியில் நடந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தந்தை திட்டுவார் என்ற அச்சத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ராஜா தற்கொலை செய்துகொண்டார்.

மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ராஜா சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், உடலில் அதிக அளவில் தீக்காயம் அதிகமிருந்ததால் ராஜா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுரவாயல் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு பெற்றோர் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எண்ணங்களைத் தவிருங்கள்

சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்.

சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண்:044-24640050

மாநிலத் தற்கொலை தடுப்பு உதவி எண்:104

இணையவழித் தொடர்புக்கு:022-25521111

மின்னஞ்சல்: help@snehaindia.org

நேரில் தொடர்புகொள்ள:

சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட்,

11, பூங்கா சாலை (Park view road), ஆர்.ஏ.புரம்,

சென்னை - 600028.

இதையும் படிங்க: ’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details