தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதன் மீது பாய்ந்த குண்டர் சட்டம் - Kundas

மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

By

Published : Jul 6, 2021, 10:33 AM IST

Updated : Jul 6, 2021, 12:01 PM IST

10:30 July 06

பப்ஜி விளையாடி பெண்களை இழிவாக பேசி, பணம் மோசடியில் ஈடுபட்ட மதன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: யூடியூப்-ல் பப்ஜி விளையாடியபோது சிறுவர்கள், பெண்களை இழிவாக பேசியதாகவும், பணம் மோசடியில் ஈடுபட்டதாகவும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன.

அதன்அடிப்படையில் மதன் மீது ஆபாசமாக பேசுதல் உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் காவல்துறையினர் கைது செய்தனர். 

அதற்கு முன்னதாக யூடியூப் சேனலுக்கு உதவியாக செயல்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்:

பின்னர் மதனின் யூடியூப் சேனலை காவல் துறையினர் முடக்கினர்.  மேலும்,  ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில்,  மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: யூடியூப் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Jul 6, 2021, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details