சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவத் தேவைகள் குறித்த 15 கோரிக்கை மனு மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. 11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
மருத்துவ கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மத்திய அரசு ஆய்வு செய்து மருத்துவப் படிப்பிற்கு 850 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. மீதமுள்ள 800 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதித்து இந்த ஆண்டில் தொடங்கிட வேண்டும் என்ற கோரப்பட்டது.
மத்திய அரசிடம் கோரிக்கை
இதுவரை, தமிழ்நாட்டில் 13 லட்சம் கோவாக்சீன் தடுப்பூசி 2ஆவது தவணைப் போடப்பட வேண்டியுள்ளது. 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மேலும், 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். 2ஆவது தடுப்பூசி செலுத்த கோவாக்சீன் தருவதாக கூறியுள்ளனர்.
மக்கள் முன்வரவேண்டும்
7ஆவது தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. 2ஆவது தவணை தடுப்பூசிப் போடவதற்காக 60 ஆயிரம் பேர்களின் பட்டியல் தயாரித்து அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மக்களை, கரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்தி போட வைக்க முடியாது. ஆனால் தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கி போட வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கரோனோ 3ஆவது அலை
உலகத்தில் கரோனா 3ஆவது அலையின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. அமெரிக்காவில் 60 ஆயிரம், இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவில் 30 ஆயிரம், சீனாவில் மீண்டும் பொது முடக்கம் போன்ற சூழல் உள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் நோய் மராட்டியத்தில் 1 சதவீதம் ஆகவும் கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆகவும் உள்ளது. எனவே, தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. தடுப்பூசி மட்டும் தான் கரோனாவிற்கான தீர்வு என்று அமைச்சர் பேசினார்.
பாதுகாப்புகள் தீவிரம்
தமிழ்நாட்டிற்குள் நடத்திய ஆய்வில், சிலருக்கு டெல்டா வைரஸ் தொற்று இருந்தது. அதிலும் 13 பேர் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து எல்லையோர மாவட்டங்களில் பாதிப்புகள் வராமல் பராமரிப்புகள் தீவிரமாக வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இ்தையும் படிங்க: ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு - மீண்டும் ஊரடங்கு