சென்னை: சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. கிணற்றை பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலை இருந்தது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றை சுத்தம் செய்துள்ளது. அந்த இடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை எனவும் அரசு விதித்துள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்டம் நடத்தலாம் என்றும் கூறினார்.
மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. காலாவதியான மருந்துகள் அல்லது பேப்பர்கள் அகற்றப்பட வேண்டியதுதான். கிணற்றில் கொட்டியது தவறுதான். செய்தியின் உண்மைத்தன்மையை அறிய இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.