தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தியன் 2 விவகாரம்: லைகா நிறுவனத்துக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி! - சங்கர்

இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும், மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் லைகா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

lyca got permission from high court in indian movie issue
lyca got permission from high court in indian movie issue

By

Published : Apr 15, 2021, 1:14 PM IST

சென்னை: இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க கூடாது என தடை விதிக்கக் கோரி மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய, லைகா நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிய நிலையில், 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும், மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் லைகா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இயக்குநர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். அதேசமயம் மனுவுக்கு பதிலளிக்க இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக, அந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலை தாக்கல் செய்வதில் இருந்து விலக்களிக்கக் கோரி லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீடு தாக்கல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details