சென்னை தி நகரை சேர்ந்த பிரத்யும்னா(33) தனது சொகுசு காரில் நண்பர் அக்ஷய் உடன் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது ர் இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அதிவேகமாக சென்ற சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி, சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி உருண்டது.
சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து - சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து
சென்னை டிடிகே சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் உருண்டது.
![சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து உருண்டதால் பரபரப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15232901-thumbnail-3x2-ddd.jpg)
உருண்டதால் பரபரப்பு
இந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சொகுசு காரில் வந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து
இதையும் படிங்க:கஞ்சா போதையில் கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள் - ரவுண்டுகட்டி பிடித்த பொதுமக்கள்
Last Updated : May 9, 2022, 1:02 PM IST