தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர் சுரேஷ்ராவ் தகவல் - மருத்துவர் சுரேஷ்ராவ் தகவல்

சென்னை: ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர் சுரேஷ்ராவ் தெரிவித்தார்.

jharkhand-minister
jharkhand-minister

By

Published : Nov 10, 2020, 6:12 PM IST

Updated : Nov 10, 2020, 10:44 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி அமைச்சராக ஜகர்நாத் மாத்தோ இருந்து வருகிறார். இவருக்கு செப்டம்பர் 25ஆம் தேதி கரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் இருந்தன. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1ஆம் தேதி அவரை பரிசோதனை செய்ததில், கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு அக்டோபர் 19ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அமைச்சர் ஜகர்நாத் மாத்தோ அழைத்துவரப்பட்டார். இங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் அமைச்சர் ஜகர்நாத் மாத்தோவின் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை சிறப்பு நிபுணர் சுரேஷ் ராவ் கூறும்போது, "ஜார்க்கண்ட் அமைச்சர் ஜகர்நாத் அக்டோபர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து, எம்ஜிஎம் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளித்து வருகிறோம். அதன் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு, தற்போது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

Last Updated : Nov 10, 2020, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details