தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா காலத்தில் 4 நோயாளிகளுக்கு 8 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை! - lung transplant in apollo hospital amid covid

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 4 பேருக்கு இரட்டை நுரையீரல் வீதம் 8 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

lung transplant in apollo hospital amid covid
lung transplant in apollo hospital amid covid

By

Published : Oct 9, 2020, 2:40 AM IST

சென்னை: கரோனா தொற்று காலத்திலும், நான்கு நோயாளிகளுக்கு தலா இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 4 பேருக்கு இரட்டை நுரையீரல் வீதம் 8 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி காணொலி காட்சி மூலம் மருத்துவர்களுக்கும், நோயாளிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். அப்போது, உடல் உறுப்பு மாற்றுவதற்கான சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனக் கூறினார்.

இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் சுந்தர், மதன்குமார், பால் ரமேஷ் கூறும்போது, சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட ஜூலை மாதத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தீவிர நூரையீரல் பாதிப்பு ஏற்பட்டு விமானத்தின் மூலம் கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்ததில் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளித்தோம். பின்னர் நுரையீரல் மாற்று அறுவை சிகச்சை செய்ய முடிவு செய்து, தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்தோம்.

இதன் மூலம் ஏழு நாள்களில் பொருத்தமான நுரையீரல் கிடைத்தது. உடனடியாக அவருக்கு 2 நுரையீரலும் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. கரோனா பரவல் அதிகரித்திருந்த நேரம் என்பதாலும், அவருக்கு எளிதில் தொற்று நோய்கள் பரவும் என்பதால் மிகவும் கவனமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். தற்போது அந்த நபர் செயற்கை சுவாசக் கருவிகள் உதவி இன்றி, சுமார் 1.5 முதல் 2 கிலோமீட்டர் வரை நடக்கிறார்.

இதே போல் கரோனா காலத்திலும் மேலும் மூன்று நபர்களுக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

கரோனா காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற முதல் நுரையீரல் இரட்டை மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும். கரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது கடினமான ஒன்றுதான்.

ஆனால் செய்ய வேண்டிய செய்முறைகளை சரியாக பின்பற்றினால் அறுவைசிகிச்சையை சரியாக செய்யமுடியும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு கட்டணமாக 25 லட்ச ரூபாயும், 2 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 45 லட்ச ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நோயாளிகளுக்கு இலவசமாக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அனைவருக்கும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவது கிடையாது. பாதிக்கப்படுபவர்களிலும் ஒரு சிலருக்குத் தான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்” என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details