சென்னை:தாம்பரம் அடுத்த சானிடோரியம் மேம்பாலம் அருகில் வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு எடுத்து ஜானகிராமன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இந்த நிலையில் தாம்பரம் துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி, உதவி ஆணையாளர் சீனிவாசன் உட்பட ஆறு பேர் கொண்ட காவல்துறை குழுவினர் சானிடோரியத்திற்கு சென்றனர்.