தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தையும் மீறி கடைகள் திறந்து வைத்திருந்த வியாபாரிகளை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் இருவரும் சந்தேகமான முறையில் உயிரிழந்தனர்.
தந்தை, மகன் உயிரிழப்பு: கருப்புக் கொடி கட்டி லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு - சாத்தான்குளம் உயிரிழப்பு
சென்னை: சாத்தான்குளத்தில் வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளில் கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
![தந்தை, மகன் உயிரிழப்பு: கருப்புக் கொடி கட்டி லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு Lorry owners protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:09:25:1593153565-tn-che-03-sand-lorry-owners-protest-script-7204894-26062020120515-2606f-1593153315-536.jpg)
Lorry owners protest
காவல் துறையினரின் கடுமையாக தாக்குதலின் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாக ஊடங்களில் செய்தி வெளியானது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக எதிர்பலை எழுந்து வருகிறது.
இதனிடையே, மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வானகரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளில் இன்று (ஜூன் 26) கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.