ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில், சீனா தப்பிச்சென்ற 'ஹாங்க்' என்ற சீன நாட்டவரைப் பிடிக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
கந்துவட்டி செயலி விவகாரம்: தப்பியவரைப் பிடிக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் - கந்துவட்டி செயலி விவகாரம்
12:52 January 15
முதல் இரண்டு சீனர்களை பெங்களூருவில் கைது செய்வதற்கு 4 நாட்கள் முன்னதாக, ஹாங்க் சீனாவுக்கு தப்பிச்சென்றதாகத் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட ஹாங்க், சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் சீனாவுக்குத் தப்பிச் சென்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
செல்போன் சிக்னல் மூலம் தேடியதில் தற்போதுவரை, 'ஹாங்க்' சீனாவில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஹாங்க்கைப் பிடிக்க 'இன்டர்போல்' உதவியை நாட உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.