தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெளிநாட்டில் தவிக்கும் தமிழர்களை விரைவாக மீட்க வேண்டும் - டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

By

Published : May 21, 2020, 3:55 PM IST

tr balu
tr balu

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விமானம், ரயில், பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”ஈரான், துபாய், குவைத், பஹ்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை விரைவாக மீட்க வேண்டும்

அங்கு வசிக்கும் தமிழர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே, அவர்களை உடனடியாக இந்திய நாட்டிற்கு அழைத்து வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தாயகம் அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய நாடும் விரைவாக செயல்பட வேண்டும். இதற்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் இந்திய நாட்டு மக்களின் அவல நிலையை பற்றி விவரிக்க வேண்டாம் என எண்ணுகிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து சிங்கப்பூர், வங்காளதேசத்திற்கு சிறப்பு விமானங்கள்!

ABOUT THE AUTHOR

...view details