சென்னை: பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சியைக் குறித்தும், அதற்கான அறிவியல் காரணங்களை குறித்தும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின் நம் செய்தியாளாருடன் நேரலையில் இன்று உரையாடினார்.
கரோனா நோய்க் கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க முடியாமல் எற்கேவே இந்தியா திணறி வரும் நிலையில், தற்போது வெட்டுக்கிளி படை தாக்குதல் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் வட மற்றும் மேற்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
வழக்கமாக இடம்பெயர்ந்து ராஜஸ்தான் மாநில எல்லை வரை மட்டுமே வந்து செல்லும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்த முறை ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பயிர்களை வேட்டையாடி வருகின்றன.
இந்த பாலைவன வெட்டுக்கிளி பயிர்களை முற்றிலுமாக அழிக்ககுடியது. ஒரு வெட்டுக்கிளி தினமும் தனது இடைக்கு நிகரான உணவு உட்கொள்ளும், அதாவது 2 கிராம் உணவு. 2 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஒரு வெட்டுக்கிளி படையில் 4 கோடி வெட்டுகிளிகாகள் வரை இருக்கும், 35 ஆயிரம் நபர்களின் உணவை காலி செய்துவிடும் என ஐ.நா அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
303 இடங்களில் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மருந்து தெளிக்கும் பணி மற்றும் வெட்டுக்கிளிகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய விவசாய அமைச்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமினை சந்தித்து ஈடிவி பாரத் செய்தியாளர் மக்கள் மனதில் சுழன்றுகொண்டிருக்கும் பல கேள்விகளை முன்வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "தற்பொழுது இந்தியாவிற்குள் நுழைந்து இருக்கும் இந்த வகை வெட்டுக்கிளிகள் வழக்கமாக எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் வாழக்கூடியவை. ஆங்காங்கே ஒன்றிரண்டு சுற்றித் திரிந்து கொண்டிருக்கும்.
ஒரு பகுதியில் வறட்சி ஏற்படும்போது இவை அங்கிருந்து அகுகேயுள்ள பசுமையான தாவரங்கள் உள்ள இடங்களை நோக்கி செல்கின்றன. ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் பூச்சிகள் பசுமை பரப்பை அடையும்போது உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது போன்ற சூழலில் வெட்டுக்கிளிகளின் உடலில் ஒரு விதமான ஹார்மோன்கள் சுரந்து வெட்டுக்கிளிகள் ஆபத்தானவையாக மாறுகின்றன.
தமிழ்நாட்டுக்கு வெட்டுக்கிளிகள் கூட்டம் வராது என மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வந்தால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் விளக்கியுள்ளது. இப்படிதான் கரோனா பாதிப்பு தமிழகத்துக்கு வராது என்று கூறினார்கள்.
தற்பொழுது நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கும் பருவ நிலை மாற்றம் காரணமாக அமைகிறது. புவி வெப்பம் அதிகரித்தல், மழை அளவு அதிகரித்தல் போன்ற கரணங்களாலும் வெட்டுக்கிளிகள் இடம்பெயர்ந்து வந்திருக்கலாம். அதே நேரத்தில் உணவு சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நேரடியாக இதற்கு காரணமாக அமைந்திருக்க வாய்பில்லை. சிட்டு குருவிகள் அழிந்ததால்தான் தற்போது வெட்டுக்கிளிகள் அதிகரித்துள்ளதாக கூறுவது சரியில்லை.
பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் போது அவற்றுடன் சேர்ந்து நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் அழிக்க நேரிடும். பயிர்களை உண்ணும் பூச்சிகளை சாப்பிடும் பூச்சிகளையும் அழிக்க நேரிடும். இதனால் நீண்ட கால சூழல் பாதிப்பு ஏற்படும்" என்று கூறுகிறார்.
உரையாடல்கள் அனைத்தும் காணொலி வடிவில் கீழ்வருமாறு பதியப்பட்டுள்ளது
- இப்போது படையெடுத்திருக்கும் வெட்டுக்கிளிகள் எந்த வகையைச் சார்ந்தது
இப்போது படையெடுத்திருக்கும் வெட்டுக்கிளிகள் எந்த வகையைச் சார்ந்தது - எவ்வளவு தூரம் வெட்டுக்கிளிகளால் பறக்க முடியும்?
எவ்வளவு தூரம் வெட்டுக்கிளிகளால் பறக்க முடியும்? - வெட்டுக்கிளிகள் இந்த திசையை நோக்கி படையெடுக்க காரணம் என்ன?
வெட்டுக்கிளிகள் இந்த திசையை நோக்கி படையெடுக்க காரணம் என்ன? - புவி வெப்பமயமாதல்; வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு - இவை இரண்டிற்கும் தொடர்பிருக்கிறதா
புவி வெப்பமயமாதல்; வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு - இரண்டிற்கும் தொடர்பிருக்கிறதா - வெட்டுக்கிளிகள் விரும்பி உண்ணும் உணவுகள் என்னென்ன?
வெட்டுக்கிளிகள் விரும்பி உண்ணும் உணவுகள் என்னென்ன? - வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் குறித்து?
வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் குறித்து? - உணவு சங்கிலியில் ஏற்பட்ட மாற்றத்தினால் இது நிகழ்ந்ததா?
உணவு சங்கிலியில் ஏற்பட்ட மாற்றத்தினால் இது நிகழ்ந்ததா? - வெட்டுக்கிளிகள் காற்றின் திசைக்கேற்ப தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளதா?
வெட்டுக்கிளிகள் காற்றின் திசைக்கேற்ப தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளதா? - வெட்டுக்கிளிகளை தடுக்கும் முறைகள் என்னென்ன?
வெட்டுக்கிளிகளை தடுக்கும் முறைகள் என்னென்ன? - தமிழ்நாட்டிற்கு இதுமாதிரியான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளதா?
தமிழ்நாட்டிற்கு இதுமாதிரியான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளதா? - இது வெளிநாடுகளின் சதியாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?
இது வெளிநாடுகளின் சதியாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?