தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

lockdown police warning
lockdown police warning

By

Published : May 13, 2021, 9:20 PM IST

Updated : May 13, 2021, 10:13 PM IST

21:13 May 13

ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொடிய கொரோனா தொற்று நோயைக் கட்டுபடுத்த  10.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது, கிரிமிநாசினி கொண்டு கைளைக் கழுவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

10.05.2021 முதல் இன்று வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர். இதனை பொதுமக்கள் ஒரு சிலர் சரியாக பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

நாளை (14.05.2021) முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி, கொரோனா தீவிரமாக பரவி வரும் இக்காலக்கட்டத்தில். சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது" என காவல்துறையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Last Updated : May 13, 2021, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details