இ பாஸ் கட்டாயம்
தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு - அனுமதி இல்லை

தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு
19:32 May 14
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு வரும் 17ம் தேதி முதல் கட்டாயம்.
- இ-பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
- வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்
அனுமதி
- வீட்டில் இருந்து அருகே உள்ள கடைகளுக்கு செல்ல மட்டுமே அனுமதி.
- ஏற்கனவே அறிவித்துள்ளபடி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
- ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி
- இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க காலை 6 முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி
அனுமதி இல்லை
- நாளை முதல் டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை
- காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை
Last Updated : May 14, 2021, 9:02 PM IST