தமிழ்நாட்டில் நான்காம் கட்ட தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீடிக்கும் தடைகள்
- திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment /Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து (Sub urban trains)
- மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவுள்ள தடை தொடரும்.
- பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து கல்லூரி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.
- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கும், மத, அரசியல், கலாசார கூட்டங்கள் நடத்துவதற்கான தடை தொடரும்.
- 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தளர்த்தப்பட்ட பகுதி
- உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
- ஊரக, நகர்புறப் பகுதிகளில் வார சந்தைகள் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
- சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.
- கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும். வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை நீட்டிக்கப்டுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் தீவிரமடையும் அங்கொடா லொக்கா வழக்கு - தென் மாவட்டங்களில் சிபிசிஐடி முகாம்