தமிழ்நாட்டில் அமலில் உள்ள 7ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் வேளையில், 8ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. அதில் மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, பேருந்து போக்குவத்துக்கு அனுமதி போன்ற பல்வேறு தளர்வுகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்ளை அறியலாம்.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிற்றுக்கிழமைகளுக்கு தளர்வு; பேருந்துகள் இயங்க அனுமதி! - ஊரடங்கு தளர்வுகள்
lockdown Extended in Tamil Nadu
18:00 August 30
தளர்வுகள்
- வங்கிகள் 100 விழுக்காடு பணியார்களுடன் இயங்க அனுமதி
- தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி
- பெரிய வணிக அங்காடிகள், 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி
- பெருநகர பேருந்து சேவைகளுக்கு அனுமதி
- மாவட்டங்களுக்குள் அரசு / தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி
- வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் திறக்க அனுமதி
- வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி
- கடைகள் 8 மணிவரை திறந்திருக்க அனுமதி
- செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க அனுமதி
- கட்டுபாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி
- மாநிலத்திற்குள், மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை
- ஞாயிற்றுகிழமைகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு நீக்கம்
நீடிக்கும் தடை
- திரையரங்குகள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்
- பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான தடை தொடரும்
Last Updated : Aug 30, 2020, 6:29 PM IST