தமிழ்நாட்டில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு - தியேட்டர்களுக்கு அனுமதி - Theatres open in Tamil Nadu
ஊரடங்கு நீட்டிப்பு
18:09 August 21
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பது, பத்து, 11, 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
- ஆகஸ்ட் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்
- கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி
- தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி
- ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை
- ஐடி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
- ஆந்திர பிரதேசம், கர்நாடாக ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
இதையும் படிங்க:செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Last Updated : Aug 21, 2021, 7:36 PM IST