தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் வேலுமணியின் பதில்கள்! - உள்ளாட்சி தேர்தல் எப்போது

சென்னை: 2018ஆம் ஆண்டு ஏற்கனவே புதிதாக மறு வரையறை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட வார்டுகளில் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

minister velumani

By

Published : Nov 16, 2019, 9:08 PM IST

உள்ளாட்சித் தேர்தல் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எதிர்கட்சி எழுப்பிய கேள்வி...

எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய மாவட்டங்களைத் திட்டமிட்டுப் பிரித்துள்ளதாகவும், இப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகள் பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், இனி 5 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து ஆளுங்கட்சி தேர்தலை நடத்தப் போகிறதா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கும் ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதா? எனவும் வினவியுள்ளார்.

‘பாரபட்சமின்றி சேலத்தை இரண்டாகப் பிரித்து ஆத்தூரை மாவட்டமாக்க வேண்டும்

நான் என்ன சொல்கிறேன் என்றால்...

2016ஆம் ஆண்டில் வட்டம் மறு வரையறை முடிந்த பின்பு தான் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறி திமுக ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் கூட, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

தமிழ்நாடு அரசு எல்லை மறுவரையறை ஆணையத்தை ஏற்படுத்தி, வட்டம் மறு வரையறை பணிகளை முடித்து மே மாதத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தித் தேர்தல் அறிவிக்கத் தேவையான அப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் அரசைக் குறை கூறும் நோக்கில் உள்ள எதிர்கட்சி தலைவரின் சந்தேகம் வருந்தத்தக்கது.

ஆவினின் புதிய ரக பாக்கெட் பால் அறிமுகம்...!

மேலும் நான் கூற விரும்புவது என்னவென்றால்...

பல்வேறு மாவட்டங்களைப் பிரிப்பது என்பது மக்களின் கோரிக்கை மற்றும் நிர்வாக நடைமுறையாகும். 2020ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பூர்வாங்க பணிகள் தொடங்க இருக்கிறது. எனவே தான் புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியை விரைந்து செயல்படுத்தி உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடந்து வருவதாலும், மாவட்டங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டாலும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படி நடக்கும் இந்த தேர்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது. மேலும், புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற பின்னர் அரசால் மேற்கொள்ளப்படும்.

விபத்தில் இறந்தாரா காந்தியடிகள்? சர்ச்சையை கிளப்பும் புத்தகம்!

எனவே, புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 2018ஆம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக வெளியிடப்பட்டுள்ள வட்டங்களின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தி முடிக்கப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details